Pages

Pages

30 ஜூலை, 2011

சமயமும் அறிவியலும்

மதமும் அறிவியலும்
சமயத்தை அறியாத அறிவியல், அறிவியலை அறியாத சமயம் ஆகி இரண்டுமே குறைவுடையன என்று அறிவியல் பேரறிஞராகிய ஐன்சுடீனால் கீழ்க்காணுமாறு கூறப்படுகின்றது.                                                                
          “Science without Religion is Lame;
           Religion without Science is Blind”
 (அறிவியல் இல்லாத மதம் ஊமையானது; மதம் இல்லாத அறிவியல் பார்வையற்றது).  இக்கூற்றின் படி, அறிவியல் சார்ந்த சமயத்தையும் சமயம் சார்ந்த அறிவியலையும் ஐன்சுடீன் எதிர்பார்க்கின்றார் என்பது தெரிகிறது.
          ஐன்சுடீன் கூற்றுப்படி, இப்பொழுது இருக்கும் நிலையில் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றும் நிறைவடையாத நிலையில் பிளவுபட்டு காணப்படுகின்றன என்பது விளங்குகிறது. 

            மேற் கூறப்பட்டுள்ள மூன்றும் பிளவுபட்டுக் காணப்படுவதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. 

ஐரோப்பியர்களின் ஆதிக்கம்

உலகில் தோன்றியுள்ள சமயங்கள் அனைத்தும் ஆசியாவிலிருந்து மட்டுமே எழுந்துள்ளன.  ஐரோப்பாவிலிருந்து எந்தச் சமயமும் எழவில்லை. 


 ஐரோப்பியர்கள் வணிகத்திலும் மற்ற நாடுகளைப் பிடித்து அடக்கி ஆட்சி செய்வதிலும் வல்லவர்கள் என்பதில் ஐயமில்லை.  தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிகப் பெரும்பான்மையானவை ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை.  இதனால், ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஆசியாவின் மெய்யியலும் இறையியலும் சிக்கித் தவிக்கின்ற காரணத்தால் மெய்யியலும் இறையியலும் தங்களுடைய சிறப்பை இழந்து நிற்கின்றன. 




அறிவியல் சார்ந்த ஆன்மவியல்

 இன்று ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மூன்றிலுமுள்ள குறைபாடுகளை நீக்கி, அறிவியல் சார்ந்த மெய்யியலாகவும் அறிவியல் சார்ந்த இறையியலாகவும் வளர்ந்துள்ள அறிவியல் சார்ந்த ஆன்மவியல், ஆசியாவில், சிறப்பாக இந்தியாவில், அதிலும் சிறப்பாகத் தமிழ்மொழியில் வளர்ந்து செழித்துள்ள நிலை உலக அறிஞர் பெருமக்களால் கூர்ந்து நோக்கத்தக்க ஒன்றாகும். 

இடைக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் தமிழ் மொழியும், தமிழ் இனமும் அடிமைப்பட்ட நிலையில் இருப்பதால், தமிழர் ஆன்மவியல் வெளியுலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கின்றது.  

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய "உலக சமயங்களை ஒன்றிணைக்கும்  தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்" என்னும் நூலில் இருந்து எழுதப்பட்டுள்ளது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக