தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே என்பவன் தனது கைத் துமுக்கி(துப்பாக்கி)யால் தேசத் தந்தை காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றான்.
கோட்சேயையும் அவனுடைய கைத்துமுக்கியையும் யார் பாராட்டுவார்கள்?
அந்தத் தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாராட்டுவார்கள்.
உரோம ஆட்சியாளர்கள் இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள்.
உரோம ஆட்சியாளர்களையும் சிலுவையையும் யார் பாராட்டுவார்கள்?
உரோம ஆட்சியாளர்கள் பாராட்டுவார்கள்.
உரோமப் பேரரசனாகிய கான்சுடன்டைன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தான். அதன் பின்னர் சிலுவை சிறப்பிக்கப்பட்டது.
யாரால்?
உரோமப் பேரரசனைச் சேர்ந்த கிறித்தவர்களால்.
கொல்லப்பட்டதன் அடையாளம் |
கான்சுடன்டைன் காலம் வரை கிறித்தவத்தைக் குறிக்க சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பின்னரே கான்சுடன்டைனைச் சேர்ந்த கிறித்தவர்கள் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தார்கள்.
சிலுவை “இயேசு கிறித்து கொலை செய்யப்பட்டார்” என்பதைக் குறிக்கும் அடையாளமாகும். சிலுவையில் இயேசு கிறித்து மட்டும் கொலை செய்யப்படவில்லை. உரோமர்களின் ஆட்சிக் காலத்தில் மரணதண்டனையை நிறைவேற்றப் பயன்பட்ட கருவிகளில் சிலுவையும் ஒன்று. அதனால் உரோமர்களால் ஏராளமானவர்கள் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
உயிர்த்தெழுந்ததன் அடையாளம் |
சிலுவை இயேசு கிறித்து உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் அடையாளம் ஆகாது. எவ்வாறு எனில் இயேசு கிறித்து சிலுவையில் உயிர்த்து எழவில்லை. இயேசு கிறித்து உயிர்த்து எழுந்ததைக் குறிக்கும் அடையாளம் வெறுமையான கல்லறையாகும்.
ஆகவே, இயேசு கிறித்து இறந்து உயிர் பெற்றார் என்பதை சிலுவை அடையாளம் குறிக்க இயலாது.
இயேசு கிறித்து
- 1. இறந்தார்
- 2. உயிர்த்தெழுந்தார்
- 3. பாவத்தை நீக்கி மக்களை மீட்டுக் கொண்டார்
ஆகிய இந்த மூன்று கருத்துகளையும் குறிக்கும் அடையாளமே கிறித்துவின் நற்செய்தியை விளக்கும் அடையாளம் ஆகும். சிலுவை அடையாளத்தால் இந்த மூன்று கருத்துகளையும் குறிக்க இயலாது.
(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய நூலில் இருந்து எடுத்து பதியப்பட்டுள்ளது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக