புனித
தோமா
|
போப்பாண்டவர் மீது வழக்குத் தொடர வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருப்பது ஏன்?
- இயேசு கிறிஸ்துவின் 12 மாணவர்களில் ஒருவரான புனித தோமையார் 20 ஆண்டுகள் (கி.பி. 52-72) தமிழகத்தில் நற்செய்திப் பணி செய்தார்.
- இதன் காரணமாகத் தமிழகத்தில் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் பக்தி இயக்கம் தோன்றியது.
- தமிழ்ப் பக்தி இயக்கம் காரணமாகத் தமிழகத்தில் சைவம், வைணவம் என்னும் இரண்டு பிரிவாகத் தமிழர் சமயம் எழுந்தது.
- கி.பி. 1523இல் போர்த்துக்கீசியர். தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தின்மேல் கட்டப்பட்டிருந்த தமிழர் சமயக் கோவிலை இடித்துவிட்டு, அந்த இடத்தின் மேல் புனித பேதுரு வழி கிறிஸ்தவக்கோவிலைக் கட்டினர்.
- 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர். அந்நியர்களாகிய போர்த்துக்கீசியர் இந்தியாவில் இருக்க இயலா நிலையில். இந்தக் கோவிலைப் போப்பாண்டவரிடம் 1950இல் ஒப்படைத்தனர்.
- போர்த்துக்கீசியரிடமிருந்து 1950இல் பெற்றுக் கொண்ட போப்பாண்டவர் 1952 முதல். சென்னை - மயிலைப் பேராயரின் ஆட்சிக்குக் கொடுத்துள்ளார்.
- புனித தோமையாரின் 20 ஆண்டுக் கால நற்செய்திப் பணியின் பயனாகத் தோன்றிய, மறைந்து கிடந்த தமிழர் சமய வரலாறு, 1968 முதல் கடவுளின் வழி நடத்துதலால் ஆராயப்படத் தொடங்கி, 1986 டிசம்பர் 6, 7 தேதிகளில் புனித தோமா வழித் தமிழ்க் கிறிஸ்தவத்தின் கிளைகளே சைவ, வைணவ சமயங்கள் (இன்றைக்கு 'இந்துமதம் எனப்படுகிறது) என்பது, தருமபுர ஆதீனத்தில் நடந்த ஆய்வரங்கில் நிலை நாட்டப்பட்டது.
- புனித தோமா வழிக் கிறிஸ்தவமாகிய தமிழர் சமயம் கி.பி. 1794க்குப் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 'இந்து மதம்’ என்று புதுப் பெயரிடப் பெற்றது.
- இதனால் புனித பேதுரு வழிக் கிறிஸ்வர்கள், புனித தோமா வழிக் கிறிஸ்தவமாகிய தமிழர் சமயத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.
- இதனால் புனித தோமா வழிக் கிறிஸ்தவமாகிய தமிழர் சமயம் உலகளாவிய நிலையில் பரவவில்லை.
- 2006ஆம் ஆண்டு புனித தோமா தென் இந்தியா செல்ல வில்லை என்று போப்பாண்டவர் அறிவித்தார்.
- இதனால், இந்துத்துவாவின் 2006 டிசம்பர் 16 நாளிட்ட ஹிந்து மித்திரன் ஏடு, ''இப்போதுள்ள போப். கேரள தமிழகக் கிறித்தவர்கள் தலையில் குறிப்பாக நமது ஊர் வடிகட்டின. ஃப்ராடுலெண்ட் தியரிகளை உலவ விடும் தெய்வநாயகத்தின் தலையில் கல்லை - பெரிய பாராங்கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார்” என்று எழுதியதுடன். இந்துக் கோவிலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் கருத்தில் கட்டுரை வெளியிட்டது.
- இந்தக் கட்டுரை வெளியான பின்னர். 2008 ஆகஸ்டு 14-17 வரை நம் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கமும் சென்னை- மயிலைப் பேராயமும் இணைந்து புனித தோமா வழித் தமிழர் சமயத்தை ஆராயும் நோக்கில் தமிழர் சமய உலக முதல் மாநாட்டை நடத்தினோம், மாநாட்டில் தோமா வழித் தமிழர் சமய வரலாறு பல்வேறு பல்கலைக் கழக அறிஞர்கள் முன்னிலையில் புனித தோமா வழி தமிழ்க் கிறிஸ்தவத்தின் மணிமுடி 'தமிழர் ஆன்மவியல்’ எனும் உண்மையும் நிலைநாட்டப்பட்டது, மாநாட்டில் நிலை நாட்டப்பட்ட வரலாற்று உண்மைகள் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்டன.
- தமிழர் ஆன்மவியல் 'ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்’, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் மையப் பொருளை விளக்குவதாயிருப்பதால் மத, இன பயங்கரவாதத்திற்குத் தீர்வாய் அன்பையும், ஐக்கியத்தையும் சமுதாயத்தில் விதைக்க அடிப்படையாய் இருப்பது குறிப்பிடற்குரியது.
- இந்த மாநாட்டின் வழி தமிழர் சமய வரலாற்று உண்மைகள், உலகில் பரவுவதைக் கண்ட இந்துத்துவா அமைப்புகள், தங்கள் அடிமைத்தளையிலிருந்து இந்து மதமாகிய தமிழர் சமயம் விடுதலையடைந்து விடுமோ என்னும் அச்சத்தில், பலவிதமான குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகின்றன.
- அவற்றில் ஒன்று, அவர்களால் வெளியிடப்பட்டுள்ள “Breaking India” என்னும் தலைப்பிலுள்ள 664 பக்கங்கள் கொண்ட நூல் ஆகும். அதில் இந்தியாவின் எதிரிகள் 1. தெய்வநாயகம் 2. தெய்வநாயகத்தின் மகள் தேவகலா என்னும் கருத்து அடங்கியுள்ளது.
- 2008இல் நம்முடன் இணைந்து மாநாடு நடத்திய சென்னை-மயிலைப் பேராயம், மாநாட்டின் போது செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின்படி, தோமா வழித் தமிழர் சமயம் பற்றி உலகுக்கோ, அவர்களுடைய அறிஞர்களுக்கோ, சபைக்கோ, தோமா நினைவிடத்தைப் பார்க்க வருகிறவர்களுக்கோகூட எடுத்துச் சொல்ல முன்வராமல் மறைத்தது.
- இந்தத் தவறான போக்கை, அவர்களிடத்தில் நேரிலும் கடிதங்கள் வழியும் எடுத்துக் கூறியும் அவர்கள் சிறிதும் இணங்கவில்லை.
- இதனால் அவர்களை எதிர்த்துப் பேராட வேண்டிய நிலையில் நாம் செய்யப்போவது 28.05.2011 நாளிட்ட கடிதத்தின் வழி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
- அந்தக் கடிதத்தைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படாத நிலையில், புனித தோமாவின் திருவிழா நாளான 3-7-2011 அன்று புனித தோமா வழித் தமிழர் சமயக் கோவில் இருந்த இடத்தில் அதை இடித்துவிட்டு அந்த இடத்தின் மீது புனித பேதுரு வழிக் கிறிஸ்தவக் கோவில் கட்டப்பட்டுள்ளமையால், இரண்டு பிரிவாரும் இணைந்து நடத்தும் கூட்டு வழிபாடு 3-7-2011இல் நடைபெற இருப்பதாகவும் அதைப் பேராயர் தொடங்கி வைக்க வேண்டும் எனவும் நம்மால் அவர்களுக்கு அழைப்பு 23-6-2011இல் அனுப்பப்பட்டது.
- இந்தக் கூட்டு வழிபாடு தொடர்பாக, சென்னை மாநகரக் காவல் ஆணையாளருக்கு நாம் கொடுத்த கடிதத்தின் நகலும் பேராயருக்கு அனுப்பப்பட்டது.
- 3-7-2011இல் நடைபெற இருந்த கூட்டு வழிபாடு பற்றிய விளக்க வெளியீடு 2-7-2011 அன்று நம்மால் வழங்கப்பட்டது.
- (கூட்டு வழிபாட்டை மறுக்கும் கத்தோலிக்கத் திருச்சபையால் தூண்டிவிடப்படும்) மதக்கலவரத்திற்கு இடம் இல்லாமல் நீதிமன்ற ஆணைபெற்று நடத்தலாமே என்று காவல்துறையினர் நம்மைக் கேட்டுக்கொண்டனர்.
- பேராயர் கூட்டு வழிபாட்டை மறுத்துக் கடிதம் கொடுத்தால் நாம் கூட்டு வழிபாட்டை ஒத்தி வைப்பதாகக் காவல் துறைக்குக் கூறியமையால். 2-7-2011 மாலை கூட்டு வழிபாட்டிற்கு பேராயரின் அனுமதி மறுப்புக் கடிதம் காவல் துறையின் வழி நமக்குக் கிடைத்தது.
- இதனால், கூட்டு வழிபாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ள செய்தி துண்டு வெளியீட்டின் வழி நம்மால் 3-7-2011 காலை வழங்கப்பட்டது.
- நாம் ஒத்தி வைப்பதை அறியாத ''கத்தோலிக்க விசுவாசிகளின் கூட்டமைப்பு” கூட்டு வழிபாட்டைத் தடுக்க கத்தோலிக்க விசுவாசிகளை அழைத்து துண்டு வெளியீடு வழங்கினர்.
- கலவரத்தைத் தூண்டும் துண்டு வெளியீடுகளை கொடுத்தவர்களைப் பாதுகாத்து. கலவரம் நடைபெறாமல் கூட்டு வழிபாட்டை ஒத்தி வைத்த துண்டு வெளியீடு வழங்கியவர்களைக் கைது செய்யுமாறு பேராயர்கள் வழி காவல் துறை கேட்டுக் கொள்ளப்பட்டமையால், நாங்கள் கைது செய்யப்பட்டோம்.
- ஆசியாவில் தோன்றிய இயேசு கிறிஸ்துவின் மாணவர்களில், புனித பேதுரு வழிக் கிறிஸ்தவம் கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியரின் அரசியலுக்கு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கிறது. இதற்குக் கருவியாக ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படும் நூல் மனிதநேயமற்ற அரசியல் வழிபாட்டு நூலான பழைய ஏற்பாடு.இயேசு கிறிஸ்துவின் மற்றொரு மாணவரான புனித தோமையார் வழித் தமிழகத்தில் பரவிய கிறிஸ்தவம் புனித தோமையார் வழித் தமிழர் சமயம் ஆகும். இது கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல், ஆரியப் பிராமணர்களின் அரசியல் சட்ட நூலான மனிதநேயமற்ற மனு நூல் வழி அடிமைப்படுத்தப்பட்டு, பிராமணர்களின் அரசியலுக்கு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கிறது.
- புனித பேதுரு வழிக் கிறிஸ்தவத்தை அடிமைப்படுத்தியுள்ள போப்பாண்டவரும், புனித தோமா வழிக் கிறிஸ்தவத்தை அடிமைப்படுத்தியுள்ள சங்கராச்சாரியாரும் மும்பையில் தங்கள் பிரதிநிதிகளை வைத்து, தங்களுடைய ஆதிக்கம் பாதிக்கப்படாமல் இருக்க ஓர் ஒப்பந்தம் செய்துள்ள செய்தி 28-6-2009 நாளிட்ட கத்தோலிக்க இதழான நம் வாழ்வில் வெளிவந்துள்ளது.
- இந்த நிலையில் தங்களை ஆரியர் என அழைத்துக் கொள்ளுவதில் மகிழ்வடையும் போப்பாண்டவர் மற்றும் சங்கராசாரியாரின் அரசியல் மற்றும் மத ஆதிக்கத்தை எதிர்த்து, கடவுள் இப்போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றார் என்பதில் ஐயம் இல்லை. இதற்கு நாம் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கருவிக்கு எதிரிகளைப் பற்றிய கவலை தேவை இல்லை.
- இனி வரும் பக்கங்களிலுள்ள,
- புனித தோமையாருக்கு எதிரான சதி பற்றிய நமது வெளியீட்டையும்
- நமக்கு எதிரான கத்தோலிக்க விசுவாசிகளின் கூட்டமைப்பின் வெளியீட்டையும்
- பேராயருக்கு 25-7-2011 நாளிட்டு நாம் போப்பாண்டவர் மீது வழக்குத் தொடர வேண்டிய நிலையில் நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாய நிலை பற்றி எழுதப்பட்டுள்ள கடிதத்தையும் வாசிக்க வேண்டுகின்றோம்.
[முனைவர்
மு. தெய்வநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “தமிழர் சமயம்” 2011 ஆகத்து
திங்கள் இதழ், பக்கம் -2இல் வந்த செய்தி இங்கு வெளியிடப்பட்டுள்ளது]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக