3 ஆக., 2011

ஆரியர் என்பவர் ஓர் இனத்தவர் அல்லர்!

                        இந்துத்துவா உருவான வரலாறு – 4
ஆரியர்கள் ஓர் இனத்தவர்கள் அல்லர்; ஆரியம் என்பது ஒரு கூட்டமைப்பு
இந்து மதம் என்பது தமிழர் மதங்களாகிய சைவத்தையும் வைணவத்தையும் குறிக்கிறது. 

இந்துத்துவா என்றால் என்ன?
இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை.  அது ஆரிய வாழ்க்கை முறையாகும். 

ஆரிய வாழ்க்கை முறை என்பது என்ன?
1.    ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர்
2.    ஆளுகை செய்வதற்கென்றே பிறந்தவர் ஆரியர்
3.    ஆரியர்களுக்குச் சேவை செய்வதையே தங்கள் பிறவிக் கடமையாகக் கொண்டவர் திராவிடர்
4. ஆரியர்களை எதிர்க்கும் திராவிடர்கள் ஆரியரின் எதிரிகள் அல்லது தீண்டத்தகாதவர்கள்.  
என்பனவற்றை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கை முறைதான் ஆரிய வாழ்க்கை முறையாகும்.  இதையே மனுநூல் வலியுறுத்துகிறது.  மனுநூலின் இக்கொள்கைக்கு ஆங்கிலேயர் கொடுத்த பெயர் தான் இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பதாகும். 

ஆரியர்கள் என்னும் சொல் யாரைக் குறிக்கும்?
            இந்தியாவின் மீது படையெடுத்து வந்த
1.    பாரசீகர்   (கி.மு. ஆறாம் நூற்றாண்டு)
2.    கிரேக்கர்  (கி.மு. நான்காம் நூற்றாண்டு)
3.    சகர்           (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு)
4.    குசானர்    (கி.பி. முதல் நூற்றாண்டு)
5.    ஊணர்      (கி.பி. நான்காம் நூற்றாண்டு)
ஆகியோரும் வணிகத்திற்காக வந்த
6.    உரோமர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு)
                      ஆகிய அறுவரும் ‘ஆரியர்’ என்னும் பொதுப்பெயரில் ஒன்றிணைந்தனர்.  இவர்கள் தங்களுக்கென்று ஒரு மதம் இல்லாதவர்கள் ஆவர்.  ஆரியர் என்பது எந்த ஓர் இனத்தின் பெயரும் இல்லை.  இவர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் அபு மலையில் ஒன்றிணைந்து திராவிட அரசனாகிய அர்சவருத்தனைக் கொன்று திராவிட ஆட்சியைக் கைப்பற்றினர்.  கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.  அவர்கள் கைப்பற்றிய பகுதி ‘ஆரியவருத்தம்’ அல்லது ஆரிய நாடு என்று    குறிக்கப்படுகிறது. 
இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்த காரணங்கள் யாவை?
1.    இவர்கள் அனைவரும் வெள்ளை நிறத்தவர்
2.    இவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்
3. தங்களால் படை எடுக்கப்பட்ட மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உடையவர்கள். 
இவ்வாறு இவர்கள் ‘ஆரியவருத்தம்’ என்பதை உருவாக்கிய பிறகு, சட்டப் புத்தகமாகிய மனுநூலை உருவாக்கினார்கள்.  இந்த மனுநூலுக்குக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் போலி ஆன்மீக விளக்கம் கற்பிக்கப்பட்டு மனு தரும சாத்திரம் ஆக்கப்பட்டது. 

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்தின் கருத்துகள் - வரலாற்றுச்சான்றுள்ளவை)
PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக