“நாங்கள்
இந்தியாவை இந்து மதச் சார்பான நாடாக்க விரும்பவில்லை. இந்துத்துவ
நாடாக்கவே விரும்புகின்றோம். ‘இந்துத்துவம்’ – என்பது இந்தியப் பண்பாடு.
இந்தியாவை அதன் பழைய பண்பாட்டுக்குக் கொண்டு வரவே விரும்புகின்றோம்.
எங்களை மதவாதிகள் என்பது தவறு. இந்து மதம் வேறு; இந்துத்துவம் வேறு. இதைக்
குறித்து யாருடனும் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன்.” -என்று அன்றைய இந்தியத் துணைப் பிரதமர் அத்வானி 25.5.2003இல் வெளியிட்ட கருத்துகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
PDFஆக சேமிக்க
“இந்துத்துவம் – என்பது ஒரு மதம் இல்லை. இது ஒரு வாழ்க்கை முறை. கடவுள் கொள்கைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.” என்று அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் வாசபாய் தெளிவாகக் கூறியுள்ளார். இந்தியாவின் உச்ச நீதிமன்றமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
அப்படியானால் ‘வாழ்க்கை முறை’ – என்றால் என்ன?
‘ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர், திராவிடர் பிறப்பால் தாழ்ந்தவர்’ என்பதை ஏற்றுக்கொண்டு வாழும் ஆரிய வாழ்க்கை முறையாகிய சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை ‘இந்துத்துவம்’ அல்லது ‘இந்துத்துவா’ என்று குறிக்கப்படுகிறது.
‘இந்துத்துவா’ என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்ட மனுநூல் அடிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுக்கொள்கை.
இது எப்படி, எப்போது, யாரால் இந்தியாவிற்கு வந்தது…. வரும் பதிவுகளில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக