இந்துத்துவம் வேறு இந்து மதம் வேறு
சர் வில்லியம் சோன்சு |
மனுநூல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வருணாசிரமக் கொள்கையாகிய
சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்குக் கி.பி.1794இல் சர் வில்லியம் சோன்சு (Sir
William Jones) என்னும் ஆங்கில நீதிபதி ‘Hinduism’ என்று புதுப்பெயர்
கொடுத்தார்.
‘Hinduism’ என்பது இன்று ‘இந்துத்துவம்’ அல்லது ‘இந்துத்துவா’ என்று அழைக்கப்படுகிறது.
‘இந்து மதம்’ – என்னும் பெயர் கி.பி. 1794க்கு முற்பட்ட இந்திய இலக்கியங்கள் எவற்றிலுமே இல்லாத புதுப்பெயர் ஆகும். பெளத்தம்,
சமணம், சைவம், வைணவம், சீக்கியம் ஆகிய ஐந்து இந்திய மதங்களில் சைவம், வைணவம் ஆகிய இரண்டு மதங்களும் ஆதிசங்கரரால் ஆரியர்களின் சாதி
ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டன. சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு ‘இந்துத்துவம்’
(‘Hinduism’) என்று புதுப்பெயர் கொடுக்கப்பட்ட பின்னர், சாதி
ஏற்றத்தாழ்வுக்கொள்கைக்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ள சைவ, வைணவ மதங்களுக்கு
‘இந்து மதம்’ (Hindu Religion) என்னும் புதுப்பெயர் உருவாயிற்று. ஆகவே இந்துத்துவா என்பது வேறு, இந்து மதம் என்பது வேறு.
‘இந்துத்துவா’ என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்ட மனுநூல் அடிப்படையிலான சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கை.
‘இந்து மதம்’ என்பது திராவிடர்களால் உருவாக்கப்பட்ட சைவமும் வைணவமும் ஆகும்.
இந்துத்துவா என்னும் பெயர் ‘இந்து மதம்’ என்று மாறிச் சைவம், வைணவம் ஆகிய மதங்களுக்கு எப்படி வந்தது? வரும் பதிவுகளில்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக