6 ஆக., 2011

திருக்குறள் - கிறித்தவ நூலே!


''திருக்குறள் ஒரு தோமா வழி தமிழ்க் கிறிஸ்தவ நூலே”
சென்னைப் பல்கலைக் கழகம் இவ்வுண்மைக்காக டாக்டர் பட்டம் அளித்தது

திருக்குறள் மீது டாக்டர் பட்டத்திற்கான ஆய்வு செய்த தி.சு. சத்தியம் என்பவர், தமது முனைவர் (Ph.D) ஆய்வேட்டில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.  அது பின்வருமாறு :
‘கிறித்தவ சமய ஆய்வில் மு. தெய்வநாயகம் மிகுதியான ஆய்வு நூல்களைப் படைத்தவராகக் காணப்படுகின்றார். இவர், தம் சமயமான கிறித்துவ சமயத்தின் விவிலியக் கோட்பாடுகளே திருக்குறளுக்கு உட்கிடக்கை என்னும் கருத்தை நிலைநிறுத்துவார் போன்று, தம் ஆய்வை அமைத்துக் கொண்டு உள்ளார். 'இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் திருக்குறளின் உட்கிடக்கை சைவசித்தாந்தமே என்று எழுந்த ஆய்வுப்போக்கு, இன்றைய காலகட்டத்தில் கிறித்தவமே குறளின் உட்கிடக்கை என்ற கருத்துப் போக்கைப் பெற்று முடிந்துள்ளது’.
(தி.சு. சத்தியம், இருபதாம் நூற்றாண்டில் திருக்குறள் ஆராய்ச்சியின் வளர்ச்சி, 1979. பக். 192-193 )
இவ்வாறு திருக்குறள் தோமா வழித் தமிழ்க் கிறிஸ்தவ நூலே என்ற ஆய்வை அலசிப் பார்த்து ஏற்றுக் கொண்டமைக்காகவே தி.சு. சத்தியம் என்பவருக்கு, சென்னைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் அளித்துள்ளது.
[முனைவர் மு. தெய்வநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “தமிழர் சமயம்” 2011 ஆகத்து திங்கள் இதழ், பக்கம் -9இல் வந்த செய்தி இங்கு வெளியிடப்பட்டுள்ளது]

PDFஆக சேமிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக