மதம்
‘தமிழ்
இனம் சிங்களர்களால் அழிக்கப்பட்டது’ என்பதில் சிங்களர்கள் ஆரிய இனம் என்று
நம்பப்படுகின்ற காரணத்தால் இனம் தொடர்பாக ஆரிய, திராவிட இனம்
தொடர்பானவற்றைப் பார்த்தோம். சீனா இலங்கைக்கு உதவும் காரணமான இனம் தாண்டிய
மதம் தொடர்பானவற்றைப் பார்க்க வேண்டிய இன்றியமையாமை நமக்கு உள்ளது.
தமிழ் இனத்தை அழித்த சிங்களர்கள் ஆரிய இனத்தவர்கள் என்று நம்பப்பட்ட காரணத்தால், ஆரிய இனத்தோடு தங்களை இணைத்து நோக்கும் ஐரோப்பிய நாடுகளின் துணை சிங்களர்களுக்குக் கிடைத்தது.
தமிழ் இனத்தை அழித்த சிங்களர்கள் ஆரிய இனத்தவர்கள் என்று நம்பப்பட்ட காரணத்தால், ஆரிய இனத்தோடு தங்களை இணைத்து நோக்கும் ஐரோப்பிய நாடுகளின் துணை சிங்களர்களுக்குக் கிடைத்தது.
சிங்களர்கள்
பெளத்த மதத்தவர்கள் என்பதால், பெளத்தர்கள் அதிகமாக வாழும் சீனாவின்
உதவியும் அவர்களுக்குக் கிடைத்தது. இலங்கைத் தமிழர்கள் திராவிட இனத்தவர்
என்பதால் ஆரிய இனத்தவரின் எதிர்ப்பு இவர்களுக்கு ஏற்பட்டது. இலங்கைத்
தமிழர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்? என்னும் அடுத்த கேள்வி இப்பொழுது
எழுகின்றது.
இந்து மதத் தலைவர்கள்
திரிகோணமலையில் சிதைக்கப்பட்ட கோவில் |
இலங்கைத்
தமிழர்கள் இந்து மதத்தினர் என்பது உலகம் அறிந்துள்ள உண்மை. இலங்கைத்
தமிழர்களை அழித்த பெளத்த சிங்களர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களையும்
இந்து மதக் கோயில்களையும் அழித்தமை அனைவராலும் அறியப்பட்டுள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களையும் இந்து மதக் கோயில்களையும் சிங்களர்கள்
அழிக்கும்பொழுது உலகிலுள்ள இந்து மதத் தலைவர்கள் இதை எதிர்த்துக் குரல்
கொடுக்காதது ஏன்? என்னும் கேள்வி எழுகின்றது. இந்து மதத் தலைவர்கள் என்று
உலகில் யாருமே இல்லையா?
இந்துத்துவாத் தலைவர்கள்
இந்தியாவில்
இந்துத்துவாத் தலைவர்கள் இருக்கின்றார்களேயன்றி இந்து மதத் தலைவர்கள்
என்று யாரும் இல்லை என்பது சற்று ஆழ்ந்து நோக்க வேண்டிய குறிப்பு ஆகும்.
(இது பற்றிய விளக்கத்திற்கு இந்துத்துவா வேறு இந்து மதம் வேறு
என்னும் பதிவையும் படிக்க). இலங்கைத் தமிழர்கள் இந்துக் கோவில்களையுடைய
இந்து மதத்தைச் சார்ந்தவர்களே தவிர, மதத்தோடும் கடவுளோடும் தொடர்பில்லாத
இந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் அல்லர்.
இந்தியாவில் இந்துத்துவாத் தலைவர்கள் இருக்கின்றார்களே தவிர இந்து மதத் தலைவர்கள் இல்லை.
இந்து மதத் தலைவர்கள் இந்தியாவில் இல்லாதபடியால், இந்து மதத்தைச் சேர்ந்த
இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க மதத் தலைவர்கள் யாரும்
இந்தியாவில் இல்லை.
இந்தியாவில்
இந்து மதத் தலைவர்கள் இல்லாமல் போகலாம். அப்படியானால் இந்தியாவைத் தவிர
உலகில், இந்து மதத் தலைவர்கள் எங்குமே இல்லையா? என்னும் கேள்வி
எழுகின்றது. இந்து மதத் தலைவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகில்
எங்குமே இப்பொழுது இல்லை என்பது தான் நடைமுறை உண்மையாக இருக்கின்றது.
இந்து மதத் தலைவர்கள் அல்லர்! |
இந்திய
ஆரியப் பிராமணர்களும் தங்களை ஆரிய இனத்தினர் என நம்பும் ஐரோப்பியர்களும்
இலங்கைத் தமிழ் இன அழிப்புக்குக் காரணமாக விளங்கினார்கள் என்றால், இவர்கள்
இருபகுதியினரையும் ஒன்றிணைத்து இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் இன அழிப்பைச்
செய்தது இந்துத்துவாக் கொள்கை என்பதே வரலாறு ஆகும்.
இந்துத்துவாக்
கொள்கை, சிங்களர்களையும் இந்தியப் பிராமணர்களையும் ஐரோப்பியர்களையும் ஆரிய இனம் என்னும் பெயரால் ஒன்றிணைத்து இந்து மதத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்
இனத்தை அழித்தது என்பதே வரலாற்று உண்மை ஆகும்.
இந்துத்துவா - இந்து மதம் இல்லை |
மதம்
இல்லாத இந்துத்துவா, மதக் கொள்கையையுடைய இந்து மதத்தை அழித்தமை இலங்கையில்
நடைபெற்றுள்ளது. காரணம் இந்து மதத்திற்குத் தலைவர்கள் இல்லை. ஆகவே,
இந்து மதத்திற்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை. இதனால் இலங்கையில் இந்து மத மக்களும் இந்து மதக் கோயில்களும் அழிக்கப்பட்டனர் என்பதை எவராலும்
மறுத்தல் இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக