9 ஆக., 2011

'திருக்குறளைச் சரியாகப் புரிந்து கொள்வோம்'-சுருக்கம் 1

'திருக்குறளைச்சரியாகப் புரிந்து கொள்வோம்’ என்னும் தலைப்பில் 5 நாள் பயிற்சி வகுப்பு தஞ்சை திருப்பூந்துருத்தியிலுள்ள கருணையானந்தர் ஆசிரமத்தில் நடத்தப்பட்டது. நமது ஆசிரியர் முனைவர் தெய்வநாயகம் பின்வருவனவற்றை விளக்கினார்.
1.       திருக்குறளின் மாண்புகள்
2.       திருக்குறள் காட்டும் தமிழரின் அரிய, ஆன்மீகச் சிந்தனைகள்
3.    சாதி ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தின் வெளிப்பாடாகத் திருக்குறள் விளங்குகின்றமை
4.    திருவள்ளுவர் காலம்
5.       பாயிரத்தின் சிறப்பு என்ன?
6.       வள்ளுவர் வாழ்த்தும் ஐந்தவித்தான் யார்?
7.       ஐந்தவித்தான் துறவியா? மனிதரா?
8.       வள்ளுவர் வாழ்த்தும் வான் எது?
9.       வான் என்பது மழையைத்தான் குறிக்கின்றதா?
10.   வள்ளுவர் வாழ்த்தும் நீத்தார் யார்?
11.   இந்திரன் என்பதன் பொருள் என்ன?
12.   வள்ளுவர் வாழ்த்தும் இயல்புடைய மூவர் யார்?
13.   வள்ளுவர் வாழ்த்தும் சான்றோர் யார்?
14.   வள்ளுவர் கூறும் 'ஊழ்’ உணர்த்தும் பொருள் என்ன?
15.   திருக்குறளில் எழுபிறவி என்பது பிறவிச் சுழற்சியைத்தான் குறிக்கின்றதா?
16.   வள்ளுவர் கூறும் ஒருமை, எழுமை, எழுபிறப்பு உணர்த்தும் பொருள்கள் என்ன?
போன்றவை விளக்கப்பட்டன. வாசகர்கள் பயனடையும்படியாக இவற்றுள் சில இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன.
உலகத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட பழமையான நூல் திருக்குறள். கி.பி. 1933இல் ஒன்று கூடிய ஆர்வலர்கள் சிலர், திருவள்ளுவரின் காலம் கி.மு. 31 என்று கூறினர்.
பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி திருக்குறள் அறநெறி காலத்தைச் சார்ந்தது. சங்க காலத்தை இயற்கை நெறி காலம் என்றும், சங்கம் மருவிய காலத்தை அறநெறிக்காலம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பிரித்துள்ளனர். அறநெறிக்காலம் என்பது கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட நூற்றாண்டுகளின் தொடக்கக் காலம் ஆகும்.
·         திருக்குறள் இயற்கை நெறிக் கால நூல் அன்று; அறநெறிக் கால நூலே ஆகும்.
·         திருக்குறள் ஆசிரியப்பாவில் இயற்றப்படவில்லை; வெண்பாவில் இயற்றப்பட்டுள்ளது.
·         சங்ககால நூல் அன்று; சங்கம் மருவிய கால நூல் ஆகும்.
என்பவை ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு. எனவே, திருக்குறள் கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட நூற்றாண்டைச் சார்ந்தது என்பது ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை.
திருக்குறளின் பாயிரம் உணர்த்துவது என்ன?
பாயிரம் என்றால் என்ன? வரும் பதிவுகளில் பார்க்கலாம்
[முனைவர் மு. தெய்வநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “தமிழர் சமயம்” 2011 ஆகத்து திங்கள் இதழ், பக்கம் -13 இல் வந்த செய்தி இங்கு வெளியிடப்பட்டுள்ளது]
PDFஆக சேமிக்க

2 கருத்துகள்:

எஸ்.சத்யதேவன் சொன்னது…

சங்க மருவியகாலம் அறுக்கருத்தை வலியுற்த்தும் நூல்கள் எழுந்தகாலமே ஒழிய. அறநெறி நிலவிய காலம் அல்ல. அறநெறிக்காலம் என்பதில் அக்காலம் அறநெறி நிலவிய காலம் என்ற பொருள் மயக்கம் இருக்கின்றது. சங்கமருவிய காலம் என்று சொல்லப்படுகின்ற காலம் அறவிழுமியங்கள் சீர்குலைந்து பரவலாகக் காணப்பட்டதால்தான் அந்த அறங்களை வலியுறுத்தி அறநூல்கள் எழுதப்பட்டன எனப்து தமிழியல் ஆய்வாளர்களின் கருத்து.

தமிழர் சமயம் சொன்னது…

சங்க காலத்தை இயற்கை நெறி காலம் என்றும்,சங்கமருவிய காலத்தை
அறநெறி காலம் என்றும் அறிஞர்கள் பகுப்பு செய்துள்ளனர்.

கருத்துரையிடுக